தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம், கடந்த 9-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் சர்ச்சையுடனே தொடங்கியது.

ஜன.10 முதல் 13-ம் தேதி வரைபேரவைக் கூட்டத்தை நடத்தஅலுவல் ஆய்வுக் குழு முடிவுசெய்தது. முதல் நாளில், ஈரோடுகிழக்கு காங்கிரஸ் உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. முன்னாள் உறுப்பினர்கள், பிரபலங்கள் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

11, 12-ம் தேதிகளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்தது. விவாதத்துக்கு முதல்வர்நேற்று பதில் அளித்தார். பிறகு, மசோதாக்கள் நிறைவேறின.

நிறைவாக, பேரவையை ஒத்திவைக்க அமைச்சர் கே.என்.நேருகொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேதி குறிப்பிடாமல் பேரவையை பேரவைத் தலைவர் அப்பாவு ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்