இடைத்தேர்தலில் தமாகா போட்டியா? - தலைவர் யுவராஜா விளக்கம்

By செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து, கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் முடிவு செய்வார், என தமாகா இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா தெரிவித்தார்.

ஈரோட்டில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஈரோடு கிழக்குத் தொகுதியில், துரதிஷ்டவசமாக இடைத்தேர்தல் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலில், இந்தத் தொகுதியில் போட்டியிட்டதன் அடிப்படையில், மீண்டும் போட்டியிட எனக்கு வாய்ப்பளித்தால் போட்டியிடுவேன். அதுகுறித்து எங்கள் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், கூட்டணிக் கட்சித் தலைவர் பழனிசாமியுடன் பேச்சு வார்த்தை நடத்துவார். அந்த முடிவின்படி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும். தேர்தலைச் சந்திக்க நாங்கள் எப்போதும் தயாராகவே உள்ளோம் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE