சென்னை: பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், ஜன.30, 31-ம் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
வங்கிகளுக்கு வாரத்தில் 5 நாட்கள் வேலை, ஓய்வூதியத்தை உயர்த்துவது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, காலி பணியிடங்களை நிரப்புவது, நிலுவையில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பது, ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்குவது ஆகிய 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் மும்பையில் இந்திய வங்கிகள் கூட்டமைப்புடன் கடந்த 12-ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் உடன்பாடு ஏற்படாததால் வரும் 30, 31-ம் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago