சென்னை: சென்னையில் சாஸ்த்ரா சத்சங்கம் சார்பில் 3 இசைக் கலைஞர்களுக்கு சங்கீத வாசஸ்பதி விருது நேற்று முன்தினம் மாலை வழங்கப்பட்டது.
ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழாவன்று சாஸ்த்ராசத்சங்கம் சார்பில் 2023-ம்ஆண்டுக்கான சங்கீத வாசஸ்பதி விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் மாலை சென்னையில் நடைபெற்றது.
இதில், கர்நாடக இசை அறிஞர் ரமா ரவி, ஓதுவார் பி.சற்குருநாதன், தவில் கலைஞர் மன்னார்குடி எம்.ஆர்.வாசுதேவன் ஆகியோருக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன் தலா ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் பட்டயத்துடன் கூடிய சங்கீத வாசஸ்பதி விருதை வழங்கினார்.
முன்னதாக, காயத்ரி கிரீஷ் தியாகராஜ சுவாமிகளின் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடினார். இவ்விழாவில் நாகசுர வித்வான் காசிம், சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.வைத்திய சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
» உலகக் கோப்பை கபடி போட்டியை தமிழகத்தில் நடத்த நடவடிக்கை - சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி தகவல்
» பொங்கல் பண்டிகை, தொடர் விடுமுறை: மாலை நேரங்களில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago