மதுரை: சென்னை தாம்பரத்தில் இருந்து மதுரை வழியாக நெல்லைக்கு கூடுதலாக ஒரு பொங்கல் சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி தாம்பரம் - நெல்லை அதிவிரைவு சிறப்பு ரயில் (06049) நாளை (ஜன. 14) தாம்பரத்திலிருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு நெல்லை வரும். மறுமார்க்கத்தில் நெல்லை - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் (06050) நெல்லையில் இருந்து ஜனவரி 18-ல் மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
இந்த ரயில்களில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 13 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 சரக்கு பெட்டிகளுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச் சீட்டு முன்பதிவு இன்று (ஜன.13) காலை 8 மணிக்கு தொடங்குகிறது என மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago