‘ராமர் பாலம் பத்திரம்’, ‘புண்பட்டது மனம்’ - சேது சமுத்திர திட்டம் குறித்து பேரவையில் கவனம் ஈர்த்த விவாதம்

By செய்திப்பிரிவு

சென்னை: சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இதில் பல்வேறு உறுப்பினர்களும் பேசினர். இதன் விவரம்:

வேல்முருகன்: “150 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தத் திட்டத்தை நிறைவேற்றி இருந்தால் சிறு கப்பல்கள் வந்து போவதற்கும், இலங்கையை தவிர்த்து கப்பல் செல்லாமல் இருக்கவும் வாய்ப்பு உருவாகி இருக்கும். தற்போது இத்திட்டத்தை முதல்வர் நடைமுறைப்படுத்த முன்வந்துள்ளது வரவேற்கத்தக்கது.”

ஜவாஹிருல்லா: “தமிழருக்கு மிகப் பெரிய அளவில் உதவி செய்யக் கூடிய சேது சமுத்திர கால்வாய் திட்டத்திற்கு ஒன்றிய அரசு முட்டுக்கட்டை போடக் கூடாது. அதை செயல்படுத்த தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் முயற்சியை மனதார வரவேற்கின்றேன்.”

நாகை மாலி: “தமிழ்நாட்டு மக்களின் நீண்ட கால கனவாக இருந்த சேது சமுத்திர திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும், தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக பல எண்ணற்ற போராட்டங்களை நடத்தி வந்துள்ளோம்.”

ஜி.கே.மணி: “ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் இது ஒரு வளர்ச்சி திட்டம். இது இந்தியாவின் பொருளாதார மேம்பாட்டு திட்டம் என்பதை ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்; இதற்கு முதலமைச்சர் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு பாமக எப்போதும் ஆதரவு தெரிவிக்கும்.”

ஓ.பன்னீர் செல்லம்: “முதலமைச்சரின் தீர்மானத்தின் அடிப்படையில் சாதகங்களை பேசி வலு சேர்க்க வேண்டும். ஆதரவு கேட்க வேண்டும். கடந்த காலங்களில் பல்வேறு கருத்துக்கள் அரசியல் கட்சியினர் தெரிவித்திருப்பார்கள். அதை பேசுவதற்கு இது நேரமல்ல. இந்த திட்டம் வரவேற்க கூடிய ஒன்று. சாதக, பாதகங்களை ஆய்வு செய்து நிறைவேற்ற வேண்டும்.”

செல்வப்பெருந்தகை: “ராமாயணம் குறித்தெல்லாம் இங்கு பேசியுள்ளனர். சுண்டல் கொடுப்பது போல இத்திட்டம் முடிந்து விடக்கூடாது என்றெல்லாம் இங்கு பதிவாகியுள்ளது. 2024-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இந்த செயல்படுத்தப்படும். இவர்கள் செய்யவில்லை என்றாலும் புதிய அரசு திட்டத்தை செய்யும். இந்த தீர்மானத்தை ஆதரவை தெரிவித்து கொள்கிறேன்.“

நயினார் நாகேந்திரன்: “ராமர் பாலத்திற்கு சேதம் இல்லாமல், சேது சமுத்திர திட்டம் நிறைவேற்ற பாஜக ஆதரவளிக்கும்.”

பொள்ளாச்சி ஜெயராமன்: “ராமர் கற்பனை கதாபாத்திரம் என்று கூறுவது மனதைப் புண்படுத்துகிறது. திட்டத்திற்கு செலவு செய்யப்பட்ட நிதி தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும். சாதக, பாதகங்களை ஆய்வு செய்து திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.”

அமைச்சர் தங்கம் தென்னரசு: “2000 ஆண்டுகளுக்கு முன்பே கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி முதல்வர் கொண்டு வந்த தனித் தீர்மானத்தை திமுக சார்பில் வரவேற்கிறேன்.”

முதல்வர் ஸ்டாலின் பேச்சு: முன்னதாக, இந்தத் தனித் தீர்மானத்தை கொண்டுவந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “அண்ணாவின் கனவு திட்டம் சேது சமுத்திரத் திட்டம், இந்த திட்டத்திற்கான தீர்மானத்தை முன்மொழிகிறேன். 1967-ம் ஆண்டு ஆட்சி பொறுப்புக்கு வந்த அண்ணா, கருணாநிதிக்கு எழுதிய மடலில் இத்திட்டத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள்.

சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினால் வர்த்தகம் பெருகும், இலங்கையை சுற்றிக்கொண்டு கப்பல் போக வேண்டிய நீளம் குறையும், மீனவர்கள் வாழ்வு செழிக்கும். 2004-ம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்தபோது அப்போதய பிரதமர் மன்மோகன்சிங் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். 1998-ம் ஆண்டு அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், இத்திட்டத்துக்கான பணிகளுக்கு நிதி ஒதுக்கினார், பாஜக ஆட்சியில் தான் சேது சமுத்திர திட்டத்துக்கான பாதை எது என தீர்மானிக்கப்பட்டது.

2004-ம் ஆண்டு ஒன்றிய அளவில் காங்கிரஸ் ஆட்சி மாறி திமுக கூட்டணி ஆட்சி வந்த பிறகு ரூ.247 கோடி நிதி ஒதுக்கப்பட்டு திட்டப் பணிகள் 50% முடிந்த நிலையில், அரசியல் காரணங்களுக்காக பாஜக இத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டது. சேது சமுத்திர திட்டத்தை இனியும் நிறைவேற்றால் இருப்பது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு, வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் நிகழ்வாகவே கருதி இந்த மன்றம் கவலை தெரிவிக்கிறது. இனியும் இந்த திட்டத்தை செயல்படுத்தவிடால் சில சக்திகள் முயல்வது நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என்று இந்த மாமன்றம் கருதுகிறது. எனவே, மேலும் தாமதம் இன்றி ஒன்றிய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த முன் வர வேண்டும். திட்டத்தை செயல்படுத்த தமிழக அனைத்து ஒத்துழைப்பும் வழங்கும்" என்றார் முதல்வர் ஸ்டாலின்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்