சென்னை | பிபிஇ கிட் அணிந்து செவிலியர்கள் போராட்டம்: கோட்டை நோக்கி பேரணி செல்ல திட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: பணி நிரந்தரம் செய்யக் கோரி, தொடர்ந்து 11-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த செவிலியர்கள் இன்று (ஜன.12) பிபிஇ கிட் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரோனா தொற்று காலத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஒப்பந்தம் அடிப்படையில் தற்காலிக செவிலியர்களாக நியமிக்கப்பட்டனர். ஒப்பந்த காலத்துக்கு பின்னர், அவர்களில் 3 ஆயிரம் பேருக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்டது. இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படாததால் சுமார் 800 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் ஒப்பந்தம் டிச.31-ம் தேதியுடன் முடிவடைந்ததால், 2,472 பேருக்கு பணி நீட்டிப்பு இல்லை என்ற தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 1-ம் தேதியில் இருந்து ஒப்பந்த செவிலியர்கள் தமிழகம் முழுவதும் தர்ணா, ஆர்ப்பாட்டம், முற்றுகை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், 11-வதுநாளாக செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறன்றனர். இதன்படி இன்று (ஜன.12) சென்னை எழும்பூரில் பிபிஇ கிட் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இவர்கள் கோட்டை நோக்கி பேரணியாக செல்ல திட்டமிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

56 secs ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்