நுகர்வோர் வீடுகளுக்கு சென்று மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மின் நுகர்வோரின் வீடுகளுக்குச் சென்று மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக கிருஷ்ணகிரி மின் பகிர்மான உதவி செயற்பொறியாளர் முத்துசாமி கூறியதாவது: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின்வாரிய அலுவலகங்கள் மற்றும் சிறப்பு முகாம்களுக்கு வர முடியாதவர்களின் வீடுகளுக்குச் சென்று மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி தொழிற்பேட்டை பிரிவில் கிருஷ்ணகிரி நகர்ப் பகுதிக்குட்பட்ட காந்திநகர், சாந்தி நகர், சென்ட்ரல் தியேட்டர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூப்பர்வைசர்கள் தனலட்சுமி, சின்னசாமி ஒயர்மேன்கள் பயாஸ், ஜெயபிரகாஷ், மற்றும் கேங்மேன் வேலுமணி உள்ளிட்டோர் நேற்று இப்பணியில் ஈடுபட்டனர்.

அதேபோல, காவேரிப்பட்டணம், சூளகிரி, வேப்பனப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளிலும் மின் ஊழியர்கள், மின் இணைப்புடன் ஆதார் இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இப்பணி வரும் 31-ம் தேதி வரை நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்