ஆலன் கரீர் இன்ஸ்டிடியூட் மாணவர்களுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு: மக்களவை தலைவர் ஓம் பிர்லாவும் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

சென்னை: ஆலன் கரீர் இன்ஸ்டிடியூட் மாணவர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார். அப்போது மாணவர்கள் வாழ்க்கையில் வைரம் போல ஜொலிக்கும் வகையில் மெருகூட்டும் நகரமான கோட்டாவுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் நாட்டின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்ட மினி இந்தியாவாக கோட்டா உள்ளது என்றார். இதில் மக்களவை தலைவர் ஓம் பிர்லாவும் பங்கேற்றார்.

இதுகுறித்து ஆலன் கரீர் இன்ஸ்டிடியூட் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள ஆலன் கரீர் இன்ஸ்டிடியூட்டுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் வருகை புரிந்தார். மக்களவை தலைவர் ஓம் பிர்லா அவருடன் வந்திருந்தார். அவர்களை ஆலன்இயக்குநர் மாதோ கிருஷ்ண தேவி மந்தனா, கோவிந்த் மகேஸ்வரி, பிரஜேஷ் மகேஸ்வரி, நவீன்மகேஸ்வரி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

நிர்மலா சீதாராமன் மாணவர்களிடம், உங்களின் ஆற்றலைப் பார்க்க வியப்பாக இருக்கிறது. உங்களுக்குப் பிரகாசமான எதிர்காலம்உள்ளது. இந்த நாடு உங்களுக்கு நிறைய வழங்க இருக்கிறது. நீங்கள் இந்த நாட்டை கட்டியெழுப்புவீர்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பின்னர் மாணவ, மாணவிகள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார். அவர் கூறும்போது, ``மருத்துவம்மற்றும் பொறியியல் கல்வி நிறுவனங்களின் இடங்களை அதிகரிக்க இந்திய அரசு விரும்புகிறது. நாட்டின்ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரியை நிறுவ அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

வெற்றிகரமான தொழில்முனைவோராக இருக்க அபாயங்களை சரியாகக் கணித்து, போட்டிகளைப் புரிந்துகொண்டு, தயாரிப்புகளை உருவாக்க வேண்டும். பாரம்பரிய பல்கலைக்கழக முறையால் தொலைதூரப் பகுதிகளுக்கு இன்னும் உயர்கல்வி சென்றடையவில்லை.எனவே டிஜிட்டல் பல்கலைக்கழகங்களை உருவாக்கும் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார்.அதற்கான பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

வாழ்க்கை எப்போதும் ஏற்றத் தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். அவற்றைப் பற்றி கவலைப்படாமல் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்'' என்று கூறினார்.

பொருளாதாரம் குறித்த கேள்விக்குப் பதிலளித்தபோது, ``பிரதமர், அமைச்சர் குழுவின் ஆலோசனைகள், சிறந்த அதிகாரிகளின் கருத்துகள் ஆகியவை பொருளாதாரம் குறித்த முடிவுகளை எடுக்க உதவுகின்றன. திறமையான, அர்ப்பணிப்புள்ள தலைமையின் கீழ் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற இலக்கை அடைய முடியும்'' கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE