பொங்கலை முன்னிட்டு நாளை முதல் ஜன.18 வரை திண்டுக்கல் - கோவை முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

By செய்திப்பிரிவு

பழநி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாளை முதல் ஜன. 18-ம் தேதி வரை திண்டுக்கல் - கோவை இடையே ஒரு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக, நாளை (ஜன.13) முதல் ஜன.18-ம் தேதி வரை கோவை-திண்டுக்கல் முன்பதிவு இல்லாத சிறப்பு விரைவு ரயில் (06077) இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் கோவையில் இருந்து காலை 9.20 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1 மணிக்கு திண்டுக்கல் வந்து சேரும்.

மறுமார்க்கத்தில் திண்டுக்கல் - கோவை முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் (06078) திண்டுக்கல்லில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு கோவை சென்று சேரும். இவை அக்கரைப்பட்டி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, பழநி, புஷ்பத்தூர், மடத்துக்குளம், மைவாடி ரோடு, உடுமலைப்பேட்டை, கோமங்கலம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் 10 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்