ஆளுநர் உரைக்கு வருத்தமும் நன்றியும்: தீர்மானம் கொண்டு வரும் திமுக எம்எல்ஏ

By செய்திப்பிரிவு

சென்னை: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசி உள்ள திமுக எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணன் ஆளுநர் உரைக்கு வருத்தமும் நன்றியும் தெரிவித்து ஒரு தீர்மானத்தை கொண்டு வர உள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜன.9 ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதில் அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக முழுமையாக படிக்கவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் தெரிவித்தார். மேலும் இது தொடர்பான தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. இந்த தீர்மானத்தின் மீது பேச உள்ள திமுக எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணன் ஒரு தீர்மானம் ஒன்றை முன்மொழிந்து உள்ளார்.

அந்த தீர்மானத்தில், "தமிழ்நாடு அரசால் அனுப்பப்பட்டு, ஆளுநரால் இசைவளிக்கப்பட்டு, பேரவைக்கு வழங்கப்பட்ட உரையில் சில பகுதிகளை இணைத்தும், விடுத்தும் ஆளுநர் உரையாற்றியமைக்கு இப்பேரவை தனது வருத்தத்தைப் பதிவு செய்கிறது. பேரவையின் மாண்பினைப் போற்றிடும் வகையில், 2023ம் ஆண்டு ஜனவரி 9ம் நாள் பேரவையில் பதிவு செய்யப்பட்ட ஆளுநர் பேருரைக்கு இப் பேரவை உறுப்பினர்கள் நன்றியுடையவர்களாவர்," என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE