கும்பகோணம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் எஸ் எஸ் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பு: “வருகிற 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் பொதுமக்கள் சிரமமின்றி பயணம் செய்ய ஏதுவாக சென்னையில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர் புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய பகுதிகளுக்கு நாளை 12-ஆம் தேதி மற்றும் 13, 14 ஆகிய தேதிகளிலும் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சியிலிருந்து தஞ்சாவூர் கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய பகுதிகளுக்கும், மதுரை, கோயமுத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்கப் பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் நாளை 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
» கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் | ‘மக்களின் குரல்’ - காங்கிரஸின் யாத்திரை வியூக பிரச்சாரம்
» கொடைக்கானலில் பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்கள் விற்கும் கடைகளுக்கு சீல்: ஐகோர்ட் உத்தரவு
கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு, ஒரத்தநாடு புறப்படும் பஸ்கள் தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்தும், கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளுக்கு புறப்படும் பஸ்கள் கோயம்பேடு புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பஸ் நிலையத்தில் இருந்தும் இயக்கப்பட உள்ளது.
இதேபோல் பொங்கல் முடிந்து பொதுமக்கள் ஊர் திரும்ப ஏதுவாக 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago