காபூல்: ஆப்கானிஸ்தானில் 1 முதல் 6-ஆம் வகுப்பு வரை மாணவிகள் கல்வி கற்க தலிபான் அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அறிவிப்பை தலிபான்களின் கல்வித் துறை அமைச்சகம், கடிதம் மூலம் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளனர்.
இதன்மூலம் ஆப்கனில் 1 முதல் 6-ஆம் வகுப்பில் படிக்கும் மாணவிகள் மீண்டும் பள்ளிக்குச் செல்ல உள்ளனர். ஆப்கானிஸ்தானில் இடைநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் படிக்க மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்கலைகழகங்களிலும் பயில மாணவிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தலிபான்களின் இந்த தடையால் நாடு முழுவதும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கத்தார், சவுதி போன்ற நாடுகளும் தலிபான்களின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில், தலிபான்கள் விடுத்துள்ள இந்த அறிவிப்பு சற்றே ஆறுதலாகப் பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி என்று அறிவித்தனர். அதேவேளையில், கடந்த முறையைப் போல் ஆட்சி இருக்காது. பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்று உறுதியளித்தனர். ஆனால், தொடர்ந்து பெண்களின் உரிமையைப் பறிக்கும் செயல்களிலே தலிபான்கள் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago