ஜெயலலிதாவின் ஊட்டி வரை உறவு

By ஆர்.டி.சிவசங்கர்

மறைந்த முதல்வர் ஜெயலலி தாவின் நீலகிரி மாவட்டத்துடனான உறவு கோடநாடு மட்டுமல்லாமல் உதகை ரோஜா பூங்கா, பைக்காரா படகு இல்லத்துக்கும் உண்டு.

நீலகிரி மாவட்டம் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக இருந்தாலும், உதகை தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம், குன்னூர் சிம்ஸ் பூங்கா ஆகியவை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருந்தன. உதகை தாவரவியல் பூங்காவின் 100-வது ஆண்டு நினைவை முன்னிட்டு கடந்த 1995-ம் ஆண்டு, 10 ஏக்கர் பரப்பில் உதகை ரோஜா பூங்கா அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப் பட்டது.

முதலில் 1,500 ரக ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டன. பின்னர் இந்த எண்ணிக்கை 3,800 ரக ரோஜாக்களும், 25 ஆயிரம் செடிகளும் என உயர்ந்தது. தென் கிழக்கு ஆசியாவிலேயே சிறந்த இப்பூங்கா, ‘கார்டன் ஆப் தி எக்ஸ்சலன்ஸ்’ விருதுக்கு கடந்த 2006-ம் ஆண்டு ஜப்பான் ஒசாகா நகரில் நடந்த சர்வதேச ரோஜா மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டது.

இந்த பூங்கா மேலும் 2 ஏக்கர் விரிவுபடுத்தப்பட்டு 200 புதிய ரக ரோஜாக்கள் நடவு செய்யப்பட்டன. தற்போது இந்த பூங்காவில் 4000 ஆயிரம் ரகங்களில் சுமார் 30 ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்த பூங்காவை தோற்றுவித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் பூங்காவில் முகப்புப் பகுதியில் ரோஜா செடி நடவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. இதேபோல, பைக்காரா படகு இல்லத்தை நிறுவினார். பைக்காராவில் நீர்வீழ்ச்சி மட்டுமே இருந்த நிலையில், மின் உற்பத்திக்காக தேக்கிவைக்கப் படும் நீர்த்தேக்கத்தில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்ய படகு இல்லத்தை திறந்துவைத்தார்.

உதகை ஏரி அசுத்தமாகி ஆகாயத் தாமரையால் சூழ்ந்ததால், சுற்றுலா பயணிகளை பைக்காரா படகு இல்லம் கவர்ந்தது. தூய்மையான நீரும், கடல் போல் விரிந்துள்ள பைக்காரா ஏரியில் படகு சவாரி செய்வதையே அனைத்து சுற்றுலா பயணிகளும் விரும்புகின்றனர். உதகை தாவரவியல் பூங்காவின் 100-வது ஆண்டை முன்னிட்டு ரோஜா பூங்கா உருவாக்கப்பட்டது. இதில் ஜெயலலிதா பங்கேற்றதன் நினைவாக உதகை தாவரவியல் பூங்காவில் ஜெயலலிதாவின் பெயரை குறிக்கும் வகையில் JJ வடிவில் தூண் அமைக்கப்பட்டது. இந்த தூணில் அவரது பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்