கோவை - நாகர்கோவில் ரயில் 3 நாட்கள் பகுதியளவு ரத்து

By செய்திப்பிரிவு

கோவை: சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “மதுரை-தூத்துக்குடி, திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால் கோவையில் இருந்து ஜன.9,10,11-ம் தேதிகளில் காலை 8 மணிக்கு நாகர்கோவில் புறப்பட்டுச் செல்லும் ரயில் (எண்:16322), ஈரோடு - நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது.

இந்த ரயில் கோவை முதல் ஈரோடு வரை மட்டுமே இயக்கப்படும். ஈரோடு முதல் நாகர்கோவில் வரை இயக்கப்படாது. இதேபோல, நாகர்கோவிலில் இருந்து ஜன.9,10,11-ம் தேதிகளில் கோவை புறப்பட்டு வர வேண்டிய ரயில் (எண்:16321), நாகர்கோவில் - ஈரோடு இடையே ரத்து செய்யப்படுகிறது. மாறாக, ஈரோட்டில் இருந்து புறப்பட்டு, கோவை வரை இயக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்