செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல் நிலைய எல்லைகளில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 387 இருசக்கர வாகனங்கள், 11 காவல்துறை வாகனங்கள் அரசு உத்தரவுப்படி வரும் 13ம் தேதி காலை 8 மணி முதல் ஏலம் விடப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் வரும் 12-ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டு மதிப்பீடு செய்துகொள்ளலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ஏலம் எடுக்க வருபவர்கள் வைப்புத்தொகையாக ரூ.1,000 செலுத்தி 13-ம் தேதிக்கு முன்னர் முன்பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது. வாகனம் ஏலம் எடுப்பவர்கள் ஏலம் கேட்கப்பட்ட தொகையுடன் 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். மேலும் மேற்படி வைப்புத் தொகை ரூ.1,000 ஏல நடைமுறைகள் முடிந்த பின்னர் திருப்பி அளிக்கப்படும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago