சங்கராபுரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் அருள் தலைமையில் நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் மற்றும் பாஜக-வின் மற்றொரு பிரிவான சக்தி கேந்திரா எனும் பிரிவின் துணைத் தலைவர் பதவி உட்பட புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சங்கராபுரம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து சுமார் 500-க்கு மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது புதிய நிர்வாகிகள் நியமனம் செய்வது தொடர்பாக நடைபெற்ற வாக்குவாதத்தில் பாஜக கிழக்கு ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன் கோஷ்டியும், மாவட்ட பொதுச் செயலாளர் ரவியின் கோஷ்டியும் முதலில் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்பு வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவரைவொருவர் சட்டை பிடித்துக் கொண்டு அருகில் இருந்த நாற்காலியை எடுத்து சரமாரியாக தாக்கி கொண்டனர். மேலும் கூட்டத்தில் உருட்டு கட்டைகள் இரும்பு ராடுகளால் ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக்கொள்ள, அதில் 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பலத்த காயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கராபுரம் காவல்துறையினர் இரு தரப்பினரிடமும் சமாதான பேச்சுவார்த்தை செய்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
33 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago