ஆளுநரும், அண்ணாமலையும் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்குகின்றனர்: கே.பாலகிருஷ்ணன்

By செய்திப்பிரிவு

சென்னை: ஆளுநரும், அண்ணாமலையும் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று (ஜன.7) தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அதிகாரத்தில் உள்ள ஒருவர் தவறு செய்யும்போது, அதை சுட்டிக் காட்டினால், தவறை திருத்திக் கொள்வது தான் நல்ல பண்பு. ஆனால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சுட்டிக் காட்ட, சுட்டிக் காட்ட மேலும் தீவிரமாக சென்று கொண்டு உள்ளார். எனவே கூட்டணி கட்சிகள் ஆளுநர் ரவிக்கு எதிராக இணைந்து செயல்பட வேண்டும். இணைந்து போராட்டத்தை நடத்த வேண்டும். சட்டமன்ற கட்சி தலைவர்களுடன் இது குறித்து பேசுவோம்.

அரசியல் கட்சி பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு அழைத்தால், பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். பதில் இல்லை என்றாவது சொல்ல வேண்டும். ஆனால் மூன்றாம் தர அரசியல்வாதி போன்று பாஜக தலைவர் நடந்து கொள்வது ஏற் புடையது இல்லை.

நான் 5 கோடி ரூபாய் வாட்ச் கட்டி உள்ளேன். இது மிகவும் பெருமைக்குரியது என்று அண்ணாமலை தான் கூறினார். அதற்கு பில் கேட்டால் ஆத்திரம் அடைந்தால் என்ன செய்ய முடியும். ஆளுநரும், பாஜக தலைவரும் தேவையற்ற முறையில் சர்ச்சையை உருவாக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது." என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்