சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்தில் கடந்த 2019 டிச.1-ம் தேதி போட வேண்டிய ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தம், 56 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் வரும் 10-ம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்தன.
இதைத் தொடர்ந்து கடந்த 3-ம் தேதி தொழிலாளர் ஆணையரகத்தில் தொழிலாளர் நலதுணை ஆணையர் ரமேஷ் குமார் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. அதில் முடிவு எட்டப்படவில்லை. அதனைத் தொடர்ந்து, அவர் தலைமையில் மீண்டும் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இதில் அரசு தரப்பில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமித்து ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையை மேற்கொள்ளலாம் என தொழிலாளர் நலதுணை ஆணையரிடம் மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்தன. இதனால் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவுற்றது.
இதற்கிடையே 9-ம் தேதி நடக்கும் பேச்சுவார்த்தையில் ஆட்சேபனையை பதிவு செய்து கலந்து கொள்வது என்றும், பேச்சுவார்த்தையின் தன்மையைப் பொறுத்து 9-ம் தேதி மீண்டும் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கூடி வேலைநிறுத்தம் குறித்து முடிவெடுக்க உள்ளதாகவும் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago