போகி அன்று தேவையற்ற பொருட்களை எரிக்க வேண்டாம்: சென்னை மாநகராட்சி வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: போகிப் பண்டிகையின்போது,சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஜன.13, 14 ஆகிய நாட்களில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள தேவையற்ற பொருட்களை எரிப்பதைத் தவிர்த்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், மாநகராட்சியின் 15 மண்டலங்களில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மக்கள் தேவையில்லாத பொருட்களை தனியாக மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களிடம் நாளை முதல் (ஜன.8) ஒப்படைக்கலாம்.

இது தொடர்பாக பேட்டரியால் இயங்கும் 3 சக்கர வாகனங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE