2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.2,900 கோடி கடனுதவி

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. உயர்மட்டப்பாதை, சுரங்கப்பாதை, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் சென்னையில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப்பணிகள் 2026-ம் ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இத்திட்டத்தின் விரிவாக்கத்துக்கு சுமார் ரூ.2 ஆயிரத்து 900 கோடி கடனுதவி வழங்க ஆசிய மேம்பாட்டு வங்கி முன்வந்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசும் வங்கி அதிகாரிகளும் அண்மையில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தம் வாயிலாக, மிகப்பெரிய தொகையை தற்போது கடனாக கிைடக்கவுள்ளது. சென்னையில் புதிய மெட்ரோ ரயில் வழித்தடங்களை உருவாக்க ஆசியமேம்பாட்டு வங்கி ஒப்புதல் அளித்துசுமார் 780 மில்லியன் டாலர் மதிப்பிலான பல அடுக்கு நிதியுதவி திட்டத்துக்கு (எம்.எப்.எப்.) ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டத்தின் ஒருபகுதியாக, முதல் தவணையாக ரூ.2,900 கோடி கடனுக்கு ஒப்புதல் அளிக்க உள்ளது.

இந்தக் கடன், சென்னை மெட்ரோரயில் திட்டத்தில் 3 வழித்தடங்களில் குறிப்பிட்ட திட்டப் பணிகளுக்கு உதவியாக இருக்கும். மாதவரம்-சிறுசேரி சிப்காட் 3-வது வழித்தடத்தில் சோழிங்கநல்லூர்-சிறுசேரி சிப்காட் வரை 10.1 கி.மீ. தொலைவுக்கு திட்டப்பணிகள் நடைபெறும்.இதில், 9 நிலையங்கள் இடம்பெறும்.

4-வது வழித்தடத்தில், கலங்கரைவிளக்கம்-மீனாட்சி கல்லூரிஇடையே 10 கி.மீ. நீளத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. 5-வது வழித்தடத்தில் சிஎம்பிடி - ஒக்கியம் துரைப்பாக்கம் இடையே வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. இத்தகவலை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE