போதை ஆசாமிகள் ரகளை, மாணவிகள் மது அருந்துவதற்கு அமைச்சர் எப்படி பொறுப்பேற்க முடியும்? - உயர் நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி தரப்பு வாதம்

By செய்திப்பிரிவு

சென்னை: போதை ஆசாமிகள் ரகளையில் ஈடுபடுவதற்கும், மாணவிகள் மது அருந்துவதற்கும் தான் எப்படி பொறுப்பேற்க முடியும் என உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில் காரசாரமாக வாதிடப்பட்டது.

பாஜக ஐடி பிரிவு தலைவரான நிர்மல்குமார் சமூக வலைதளங்களில் தன்னைப்பற்றி நீதிமன்றம் தடைவிதித்தும் அவதூறு பரப்பி வருவதாக செந்தில் பாலாஜி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் எம்.எஸ்.கிருஷ்ணன், வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதிடுகையில், பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகு ஜனநாயக முறையில் விமர்சனம் செய்தால் அதை எதிர்கொள்வது வேறு.

ஆனால் தனிப்பட்ட முறையில் அவதூறான கருத்துகளை விமர்சனமாக செய்வதைத்தான் எதிர்க்கிறோம். போதை ஆசாமிகள் ரகளையில் ஈடுபடும் வீடியோக்களையும், பேருந்தில் மாணவிகள்சிலர் மது அருந்தும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பிரசுரித்து இதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜிதான் காரணம் எனக் கூறியுள்ளனர். இதற்கெல்லாம் அமைச்சர் எப்படி பொறுப்பேற்க முடியும் என வாதிட்டனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, அது எப்படி பொறுப்பேற்க முடியாது எனக்கூற முடியும் என்றார். தொடர்ந்து அவதூறு பரப்புவதாக வீடியோ காட்சிகளை நீதிபதியிடம் போட்டுக் காண்பித்தனர். அதையடுத்து இந்த வழக்கு விசாரணையை நீதிபதி இன்றைக்கு (டிச.5) தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்