மதுரை: ஃபிலிம் டிவிஷன், தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம், குழந்தைகள் திரைப்படக் கழகம் ஆகியவை மூடப்படுவதற்கு மதுரை சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திரைப்படம் தொடர்பான மத்திய அரசின் அமைப்புகளான, பிலிம் டிவிஷன் (Film Division), தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் (National Film Development Corporation), குழந்தைகள் திரைப்படக் கழகம் (Children's Film Society of India), திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் (Directorate of Film Festivals) ஆகியனவற்றின் அனைத்துக் கிளைகளும் மூடப்படுதாகவும், இந்த அமைப்புகள் அனைத்தும் திரைப்பட விழாக்கள் இயக்குநரகத்துடன் இணைந்த தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்துடன் ஒரே அமைப்பின் கீழ் இணைக்கப்படுவதாகவும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் முடிவெடுத்துள்ளதாக அறிவித்திருந்தது.
மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் இந்த முடிவை எதிர்த்து சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் பதிவாகி வருகின்றன. இந்தியாவின் பாரம்பரியம் மிக்க 'ஃபிலிம் டிவிஷன்' மூடப்படுவதற்கும், முக்கிய வரலாற்று ஆவணக் காப்பகமாக விளங்கி வரும் தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் மூடப்படுவதற்கும் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.
மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் இன்று தனது ட்விட்டர் தளத்தில் கண்டனக் குரல் எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: ''வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஃபிலிம் டிவிஷன் ஆஃப் இந்தியா (FDI) மற்றும் NFAI, DFF ஆகியவை இழுத்து மூடல். வரலாறு தங்களுக்கு சாதகமாக இல்லாதபோது அதை அழிப்பதே கோழைகளின் செயல். வரலாற்றுக் காட்சிகளின் மூலப்பொருட்கள் மீது நடக்கும் தாக்குதலுக்கு எதிராக கண்டனக்குரல் எழுப்புவோம்'' என்று சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
43 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago