கடலூர்: கர்நாடகா மாநிலம் சாம்ராட் நகர் மாவட்டம் கொள்ளேகால் பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ் (40) இவர் கர்நாடகா மாநில அரசுப் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் இவர் தமிழகத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 50 பேரை அரசு பேருந்தில் அழைத்துக் கொண்டு வந்துள்ளார் .
இவர்கள் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் கோயில்களை பார்வையிட்டு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நேற்று(ஜன.3) இரவு வந்துள்ளனர்.
இந்நிலையில் பேருந்து ஓட்டுநர் பேருந்தில் வந்தவர்களை இறக்கி விட்டுவிட்டு பேருந்து ஒட்டுநர் இருக்கையில் அமர்ந்த நிலையில் தூங்கி உள்ளார். இன்று (ஜன.4) அதிகாலையில் பேருந்தில் ஏறியவர்கள் ஓட்டுநரை எழுப்பியபோது ஓட்டுநர் மயக்கம் அடைந்த நிலையில் இருந்துள்ளதால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
» சாலையில் பள்ளம்: மதுரவாயல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளம் பெண் பலி
» "இந்திய ஒற்றுமை யாத்திரையை ஆர்எஸ்எஸ் கண்டித்ததே இல்லை" - ராமர் கோயில் அறக்கட்டளை செயலர் கருத்து
அதன்பேரில் போலீஸார் அவரை மீட்டு சிதம்பரம் ராஜ முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து ஏற்கெனவே அவர் உயிரிழந்து விட்டார் என்று தெரிவித்தனர். இது குறித்து சிதம்பரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago