சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட மேம்பாட்டுக்காக, மின்விநியோக ஒப்பந்தத்தை லின்க்சன் நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியுள்ளது. இத்திட்டத்துக்கு ஆசிய மேம்பாட்டு வங்கி நிதியளிக்க உள்ளது.
சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 118.9 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்தவழித்தடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்டபாதை, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன. இது தவிர,தண்டவாளங்கள் அமைக்கவும் அண்மையில் ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மேம்பாட்டு பணிக்காக மின்விநியோக ஒப்பந்தம் லின்க்சன் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒருபகுதியாக இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், மின்தடம் முதல் மெட்ரோ ரயில் வரை நம்பகமான மற்றும் நிலையான மின்சாரம் மற்றும் விநியோகம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும். இது சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்தை உருவாக்குவதில் ஒரு பகுதியாக இருக்கும்.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 5 ஆண்டுகளில் நிறைவடையும்போது, மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் 15 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
43 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago