சென்னை | தெருக்களில் சுற்றித்திரிந்த 446 மாடுகள் பிடிபட்டன

By செய்திப்பிரிவு

சென்னை: கடந்த 2 வாரத்தில் சென்னை தெருக்களில் சுற்றித்திரிந்த 446 மாடுகள், மாநகராட்சி அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு, அபராதமாக ரூ.8.92 லட்சம் வசூலிக்கப்பட்டது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையில் பொதுமக்களுக்கும், போக்கு வரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்கள் மீது மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களிடம் ரூ.2 ஆயிரம் வரை அபராதமாக வசூலிக்கப்படுகிறது.

அதன்படி, கடந்த டிச.14 முதல் 27-ம்தேதி வரை 2 வாரத்தில் மட்டும் சென்னை தெருக்களில் சுற்றித் திரிந்த 446 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக தேனாம்பேட்டை மற்றும் அடையாறு மண்டலங்களில் தலா 50 மாடுகளும், கோடம்பாக்கத்தில் 36 மாடுகளும், வளசரவாக்கத்தில் 35 மாடுகளும் பிடிபட்டன. இவ்வாறு பிடிக்கப்பட்ட மாடுகளின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.8.92 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE