ஜிஎஸ்டி சட்ட குளறுபடிகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி ஜன.24-ல் வணிகர் சங்கம் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: ஜிஎஸ்டி சட்ட குளறுபடிகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி வரும் 24-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறஉள்ளதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய, மாநில அரசுகள் ஜிஎஸ்டி மற்றும் வணிகவரி தொடர்பாக பல்வேறு குளறுபடியான சட்டங்களை இயற்றி வந்துக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் தற்போது வணிகவரித் துறை மேற்கொண்டுவரும் டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறையை தமிழக அரசு உடனடியாக முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

மேலும், தொழிலாளர் நல சட்ட விதிகளை அமல்படுத்தும்போது வணிகர்களை அழைத்துப் பேசிஇடர்பாடுகளை களைய வேண்டும். இப்பிரச்சினைகளை வலியுறுத்தி வரும் 24-ம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

முதற்கட்டமாக, வரும் 10-ம் தேதிகடை முன்பாக கோரிக்கைகள் அடங்கிய பலகைகள் வைக்கப்படும். எங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு ஏற்படாவிட்டால் அடுத்த கட்டமாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். அதன் பிறகு கடையடைப்பு போராட்டமும் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE