கடலூர் | திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் 5 பேர் பலி

By ந.முருகவேல்

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை லாரி, கார் என ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதில் கேரளாவில் உள்ள கோயிலுக்குச் சென்று விட்டு சென்னை திரும்பிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் நங்கநல்லூரைச் சேர்ந்த விஜய் வீரராகவன் குடும்பத்தைச் சேர்ந்த அவரது மனைவி வத்சலா, அம்மா வசந்தலட்சுமி, மகன்கள் விஷ்ணு மற்றும் அதிருத் உள்ளிட்ட 5 பேரும் கேரளாவில் உள்ள கோயிலுக்கு இரு தினங்களுக்கு முன் காரில் சென்றுவிட்டு நேற்று சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த போது, இன்று காலை கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த ஐயனார்பாளையம் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதனால் சாலையில் காரை மெதுவாக இயக்கிக் கொண்டிருந்த போது, பின்னாலிருந்து வந்த சரக்கு லாரி எதிர்பாரதவிதமாக காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

மோதிய லாரியின் பின்னால் தொடர்ந்து வந்த மற்றொரு லாரியும் முன்னால் சென்ற லாரி மீது மோதியுள்ளது. இதில் காரில் பயணித்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்த வேப்பூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று, விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்