திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்த 6 அடி உயர மெகா வாழைத்தார்

By செய்திப்பிரிவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்த 6 அடி உயர மெகா வாழைத்தாரை பலரும் ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர்.

திண்டுக்கல்லில் உள்ள வாழை மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பிற பகுதிகள் மற்றும் கரூர், தேனி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் விற்பனைக்கு வாழைத் தார்கள் கொண்டு வரப்படுகின்றன. வாழைத்தார் வரத்து குறைந்ததால் அவற்றின் விலை அதிகரித்துள்ளது. ரூ.300- க்கு விற்பனையான ஒரு தார் பூவன் வாழை நேற்று ரூ.500-க்கு விற்றது.

செவ்வாழை தார் ரூ.800-க்கு விற்பனையானது விலை உயர்ந்து ரூ.1200-க்கு விற்பனையானது. நாட்டு வாழைத்தார் ரூ.200 -லிருந்து அதிகரித்து ரூ.400-க்கு விற்றது. ரஸ்தாலி ரூ.500 க்கு விற்றது. அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை வரவுள்ளதால் வாழைத்தார்களின் விலை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

நேற்று திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு சுரைக்காபட்டி வாழைத் தோட்டத்தில் விளைந்த ஆறு அடி உயர கற்பூரவள்ளி வாழைத்தாரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 702 பூவன் பழங்களை கொண்ட இந்த உயரமான வாழைத்தார் ரூ.1500 க்கு விற்பனையானது. இந்த மெகா வாழைத்தாரை பலரும் ஆச்சரியத்துடன் கண்டுசென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE