சென்னை: சென்னையில் அதிக அளவு சொத்து வரி நிலுவை வைத்துள்ளவர்கள் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அடுத்த வாரம் முதல் இந்த நடவடிக்கையை தொடங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சியின் வரி வருவாயில், முதன்மையானது சொத்து வரி மற்றும் தொழில் வரியாகும். 2022 - 2023-ம் நிதியாண்டில் ரூ.800 கோடி சொத்து வரி கிடைக்கும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில், தமிழகம் முழுவதும் சொத்து வரி உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக அரையாண்டுக்கு தலா 700 கோடி ரூபாய் என ரூ.1,400 கோடி ரூபாய் வரை மாநகராட்சிக்கு சொத்து வரி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், புதிய சொத்து வரி உயர்வை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் காரணமாக சென்னையில் நிலுவையில் உள்ள சொத்து வரி மற்றும் புதிய சொத்து வரியை வசூலிக்கும் பணியை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. குறிப்பாக, அதிக அளவு நிலுவை வைத்துள்ளவர்களுக்கு எதிராக ஜப்தி நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “சென்னையில் சொத்து வரியை ஒவ்வொரு அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் செலுத்துவோருக்கு, ஐந்து சதவீதம் அல்லது 5,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். அதற்குப் பின், சொத்து வரி செலுத்துவோருக்கு, இரண்டு சதவீத தனி வட்டி விதிக்கப்படுகிறது. இந்த நிதியாண்டில் சொத்து வரி உயர்த்தப்பட்டாதால், தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்துவதற்கு, ஜனவரி 12 வரை மாநகராட்சி அவகாசம் அளித்துள்ளது.
» தமிழகத்தில் இதுவரை பி.எப்-7 வகை கரோனா பாதிப்பு இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
» 'திமுக ஆட்சியில் கேள்விக்குறி ஆகியிருக்கும் பெண்களின் பாதுகாப்பு' - இபிஎஸ் கண்டனம்
சொத்து வரி நிலுவை வைத்துள்ளவர்களின் பட்டியல் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. இதன்படி 25 லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்து வரி செலுத்ததாத 38 நபர்கள், ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை சொத்து வரி செலுத்தாத 140 நபர்கள், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சொத்து வரி செலுத்தாத 321 நபர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மொத்தம் ரூ.66.37 கோடி ரூபாய் சொத்து வரி நிலுவை வைத்துள்ளனர்.
இவர்களைத் தவிர்த்து பலர் இந்த ஆண்டுக்கான சொத்து வரியை செலுத்தாமல் உள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி நடப்பு நிதியாண்டில் நிலுவை வைத்துள்ளவர்களுக்கு தனி வட்டி விதிக்கப்படும். பல ஆண்டுகளாக நிலுவை வைத்துள்ளவர்களுக்கு முதல் கட்டமாக நோட்டீஸ் வழங்கப்படும். இதையும் மீறி வரி செலுத்தாதவர்களுக்கு எதிராக ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த வாரம் முதல் இந்தப் பணிகளை தொடங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது" என்று அவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago