தமிழகத்தில் இதுவரை பி.எப்-7 வகை கரோனா பாதிப்பு இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் இதுவரை பி.எப்-7 வகை கரோனா பாதிப்பு இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டியில்," பி.எ-5ல் இருந்து உள் உருமாற்றம் அடைந்த பி.எப்-7 வைரஸ் தாக்கம் சீனா, தைவான், ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் அதிகமாகியுள்ளது. அந்த வகையில் சீனாவில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்த 2 பேருக்கு கரோனா பாதிப்பு இருந்தது. அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் கம்போடியாவில் இருந்து வந்த ஒருவர், துபாயில் இருந்து வந்த ஒருவர் என 13 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த 13 பேரின் மாதிரிகள் மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. சீனாவில் இருந்து வந்தவருக்கு பி.எ-2 வகை வைரஸ் பாதிப்பும், மஸ்கட்டிலிருந்து வந்தவருக்கு பி.எ-2 (10.1) திரிபும், பாங்காக்கில் இருந்து வந்தவருக்கு பி.எ-2 (10.1) என 6 பேருக்கும் ஓமிக்ரானின் உருமாற்ற வைரஸ் பாதிப்புகளே கண்டறியப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தமிழ்நாட்டில் கடந்த 6 மாதங்களாக நிலவும் வைரஸ் பாதிப்புகளாகும். இந்த வகை வைரஸ் பாதிப்புகளில் உயிர் இழப்பு நிலை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த டிசம்பர் மாதம் முழுவதும் 93 பேரின் மாதிரிகள் மரபணு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. அதில் 91 பேருக்கு ஓமிக்ரான் வகை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற 2 பேருக்கு மட்டும் டெல்டா வகை கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளார்கள்." என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்