சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு மீண்டும் அதிமுகவிற்கு கடிதம் அனுப்பினார், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ.
மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எங்கிருந்தாலும் வாக்களிக்கும் வகையில் ‘ஆர்விஎம்’ (ரிமோட் எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்) என்ற புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தலைமை தேர்தல் ஆணையம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
இது தொடர்பாக ஜனவரி 16-ம் தேதி நடைபெறும் செயல் விளக்க நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு தேசியக் கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக கடந்த 29-ம் தேதி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ, அதிமுகவிற்கு கடிதம் எழுதினார். இந்தக் கடிதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால், இந்தக் கடிதத்தை அதிமுக ஏற்க மறுத்துவிட்டது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி குறிப்பிட்ட பதவிகளில் யாரும் இல்லை என்று கூறிய அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், அந்தக் கடிதத்தை திருப்பி அனுப்பினர். இது குறித்து விளக்கம் அளித்த, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ, இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்த ஆவணங்களின்படி தான் அதிமுகவிற்கு கடிதம் அனுப்பப்பட்டதாக தெரிவித்தார்.
இந்நிலையில், அதே கடிதத்தை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு மீண்டும் தபால் மூலம் அனுப்பி உள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று மீண்டும் குறிப்பிட்டு மீண்டும் கடிதம் அவர் கடிதம் அனுப்பி உள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago