வைகுண்ட ஏகாதசி: தமிழகம் முழுவதும் உள்ள வைணவ தலங்களில் சொர்க்கவாசல் திறப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள வைணவ தலங்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு இன்று (ஜன.2) காலை 6:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்களின் ‘கோவிந்தா’ ‘கோபாலா’ கோஷம் முழங்க சொர்க்கவாசல் வழியாக பெரிய பெருமாள் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னார் பரமபத வாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

இதுபோன்று சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், நாமக்கல் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குடைவரை கோயிலான அரங்கநாதர் கோயில், திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயில், சென்னை அடுத்த திருநீர்மலை ரங்கநாதர் பெருமாள் கோயில், கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதர் கோவியில், சேலத்தில் பிரசித்திபெற்ற கோட்டை அழகிரிநாதர் சுவாமி கோயில், அரியலூர் கோதண்டராமசாமி கோவியில், திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள், திருவண்ணாமலை ஸ்ரீநிவாச பெருமாள், ராஜபாளையம் அயன்கொல்லங்கொண்டான் இடர்தவிர்த்த பெருமாள், சேத்தூர் ஸ்ரீநிவாச பெருமாள் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE