தமிழகம் முழுவதும் அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழுவதும் அரையாண்டு விடுமுறை முடிந்து மீண்டும் இன்று (ஜன.2) பள்ளிகள் திறக்கப்பட்டது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டு மற்றும் 2-ம் பருவத்தேர்வு கடந்த டிசம்பர் 16 முதல் 23-ம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து அரையாண்டு விடுமுறை டிசம்பர் 24-ம் தேதி தொடங்கி நேற்றுடன் (ஜன.1) நிறைவு பெற்றது. இதையடுத்து இன்று (ஜன.2) பள்ளிகள் திறக்கப்பட்டன.

இன்று முதல் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் காரணமாக ஆரம்பப் பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜனவரி 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.

விடுமுறை முடிந்து பள்ளி திரும்பும் மாணவ, மாணவிகளுக்கு திருத்தப்பட்ட அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்கள் முதல் நாளில் வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு பாடத்திலும் மாணவர்கள் பின்தங்கிய பாடங்களில் கவனம் செலுத்தி அவர்கள் தேர்ச்சியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நிலுவை பாடங்களை துரிதமாக நடத்தி முடிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE