சென்னை: அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 442 பேருந்துகளை கொள்முதல் செய்து வழங்க ஜன.16-ம் தேதி வரை ஒப்பந்தப்புள்ளி கோர அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது.
தமிழகத்தின் 8 போக்குவரத்து கழகங்களில் உள்ள காலாவதியான பேருந்துகளை மாற்றவும், பிஎஸ்-6 வகை பேருந்துகளைப் பயன்படுத்தி மாசுபாட்டைக் குறைக்கும் வகையிலும் புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி, முதல்கட்டமாக சென்னை, மதுரை, கோவை கோட்டங்களுக்கு 442 பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரும் அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது.
ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியுதவி திட்டத்தின் கீழ் வாங்கப்படும் இந்த பேருந்துகளில் கோவை, மதுரை கோட்டங்களுக்கு தலா 100 பேருந்துகளும், சென்னைக்கு 242 பேருந்துகளும் வழங்கப்படும்.
» இந்திய விமானப் படையின் மேற்கு பிரிவு தலைவராக ஏர் மார்ஷல் பங்கஜ் மோகன் சின்ஹா பொறுப்பேற்பு
» ஆந்திரா | மீண்டும் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற நிகழ்வில் கூட்ட நெரிசல்: 3 பெண்கள் பலி
இந்த பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்தப்புள்ளி கோருவோருக்கு வாய்ப்பு தரும் வகையில், ஜன.16-ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதிக அளவிலான நிறுவனங்கள் போட்டியிடும் என எதிர்பார்க்கிறோம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago