தேர்தல் ஆணையத்தின் ஆவணப்படியே அதிமுக அலுவலகத்துக்கு கடிதம்: தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பெயர்களில் தேர்தல் ஆணையம் அனுப்பிய ஆவணப்படியே அதிமுக அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்க ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவது தொடர்பாக தங்கள் கருத்துகளை தெரிவிக்கும்படி, நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்தது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அதிமுக, திமுக, தேமுதிக, ஐயுஎம்எல், பாமக கட்சிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ வாயிலாக கடிதம் அனுப்பப்பட்டது.

ஏற்கெனவே, அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்சினையால் ஓபிஎஸ், பழனிசாமி தரப்பினர் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். பழனிசாமி தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான விவரங்கள் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிந்து சென்ற ஓபிஎஸ், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற நிலையில் செயல்பட்டு வருகிறார். பழனிசாமி நடத்திய பொதுக்குழு செல்லாது என ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தச் சூழலில், அதிமுகவுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் இருந்தது.

இதை ஓபிஎஸ் தரப்பு வரவேற்ற நிலையில், பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், கடிதம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இந்த கடிதம் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹூ கூறும்போது, “தேர்தல் ஆணையத்தின் ஆவணங்கள் படியே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பெயரில் கடிதம் அனுப்பப்பட்டது” என தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்