சென்னை: எந்த விதமான அசம்பாவிதங்கள் இன்றி ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸாருக்கு டிஜிபி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆங்கில புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதற்காக தமிழகம் முழுவதும் 90 ஆயிரம் போலீஸார், ஊர்காவல் படையைச் சேர்ந்த 10 ஆயிரம் பேர் என 1 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையில் 16 ஆயிரம் போலீஸார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து போலீஸாருக்கும் அனுப்பியுள்ள பாராட்டு செய்தி: புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அனைத்து மாநகரங்களிலும், மாவட்டங்களிலும் காவல் துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. தமிழகம் எங்கும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் எந்தவித அசம்பாவித சம்பவங்களும், விபத்துகளும் இல்லாமல் சிறப்பாக நடந்து முடிந்தது.
மாநகர காவல் ஆணையர்களுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட அனைத்து காவலர்கள் மற்றும் ஊர்காவல் படையினருக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒத்துழைப்பு வழங்கிய பொது மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு டிஜிபி குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago