சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மது போதையில் ஓட்டியவர்களின் 360 வாகனங்கள் பறிமுதல்

By செய்திப்பிரிவு

சென்னை: ஆங்கில புத்தாண்டையொட்டி போலீஸார் நடத்திய சோதனையில் சென்னை மாநகர் முழுவதும் 932 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்களின் 360 இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுக்காக சென்னை போலீஸார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில் 16 ஆயிரம் போலீஸார், 1,500 ஊர்காவல் படையினர் ஈடுபட்டனர். பொது மக்கள்அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டு தலங்களில் போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தனர்.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி 31-ம் தேதி இரவு 8 மணிக்கு மேல் மெரினா, சாந்தோம், பெசன்ட்நகர் எலியட்ஸ், நீலாங்கரை, பாலவாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் உட்படஅனைத்து கடற்கரை மணற்பகுதிகள் மற்றும் கடற்கரை ஓரங்களில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தடையை மீறுபவர்களை கண்காணிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன.

வாகனங்களை ஒழுங்குபடுத்த 368 இடங்களில் வாகனத் தணிக்கைநடைபெற்றது. பைக் மற்றும் கார்ரேஸை தடுக்க 25 தனிப்படைகள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டன. இந்நிலையில், புத்தாண்டுகொண்டாட்டத்தையொட்டி மருந்து அருந்தி வாகனம் ஓட்டியதாக சென்னையில் 360 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் அதிவேகமாக ஓட்டுதல்,ஒரே பைக்கில் இருவருக்கு மேல் செல்லுதல், சிக்னலில் நிற்காமல் செல்லுதல் உட்பட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாக 572 வாகனங்கள் என மொத்தம் 932 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முன்னதாக கடந்த 25-ம் தேதிமுதல் 30-ம் தேதி வரை இதர போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாக சென்னையில் 694 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களின் பாதுகாப்பு பணியில் காவல் ஆணையர் சங்கர்ஜிவால் தலைமையில் 16 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்