திருச்சி மாவட்டத்தில் பள்ளி இடைநின்ற 1,452 மாணவர்கள்

By செய்திப்பிரிவு

திருச்சி: நிகழ் 2022-23-ம் கல்வியாண்டில் திருச்சி மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களில் இடைநின்ற மாணவர்கள் 1,452 பேர் என கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு, மாநிலம் முழுவதும் ஆண்டுதோறும் பள்ளிச் செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட எமிஸ் இணையதள பயன்பாட்டால் இடைநிற்றல் மாணவர்கள் குறித்த தகவல்கள் பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் மற்றும் உயர் அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்த எமிஸ் இணையதளத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தொடர் விடுப்பு எடுக்கும் மாணவர்களின் பட்டியலை பதிவிடவும் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,659 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் டிச.30-ம் தேதி வரையிலான எமிஸ் இணையதள புள்ளி விவரங்களின்படி, 5,900 மாணவர்கள் இடைநிற்றல் பட்டியலில் இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

இந்த புள்ளி விவரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால், ஆட்சியர் மா.பிரதீப்குமார் இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவும், கடந்த கல்வியாண்டில் அதிக இடைநிற்றல் கண்டறியப்பட்ட 18 கிராமப்புறப் பகுதிகளில் தீவிரமாக கள ஆய்வு நடத்தவும் உத்தரவிட்டார்.

இதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி உள்ளிட்ட கல்வி அலுவலர்கள் தலைமையிலான வட்டார வள மைய ஆசிரியர் மேற்பார்வையாளர்கள், சிறப்பாசிரியர்கள் ஆகியோர் இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து, அவர்களை கவுன்சிலிங் முறையில் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக அலுவலர்கள் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறுகையில், ‘‘இந்த நேரடி கள ஆய்வில் 200 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில், எமிஸ் இணையதளத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் இடைநிற்றல் மாணவர்களை கண்டறிய நடத்திய ஆயவின்போது, மேல்படிப்பு, வெளிமாநிலம், வெளிநாட்டுக்கு சென்றோர் எமிஸ் இணையதள பதிவில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட கள ஆய்வுக்கு பிறகு பள்ளிக்குச் செல்லாமல் இடைநின்ற 1,452 மாணவர்கள் கண்டறியப் பட்டுள்ளனர். மேலும், 51 மாணவர்கள் கவுன்சிலிங் அளிக்கப்பட்ட பிறகு மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான இடைநிற்றல் மாணவர்கள் சொந்த விருப்பத்தின் பேரிலும், சிலர் சூழ்நிலை காரணமாகவும் கல்வியை தொடரவில்லை’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்