வாகன தணிக்கையின்போது விபத்தில் இளைஞர் பலி: தாக்குதலில் காயமடைந்த 16 போலீஸாருக்கு சிகிச்சை - பதற்றத்தை தணிக்க கூடுதல் பாதுகாப்பு

By செய்திப்பிரிவு

சேலம் அருகே வாகனத் தணிக் கையின்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்ததால் பொதுமக்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் காயமடைந்த 16 போலீஸார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்த கோனேரிப்பட்டி வளவு கிழக்கு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சரவணன்(22). வீட்டிலேயே தறி அமைத்து நெசவுத் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் இளம்பிள்ளையில் இருந்து வீட்டுக்கு சரவணன் சென்றுகொண்டு இருந்தார். அப்போது இடங்கணசாலை கூட்டத்து புளியமரம் என்ற இடத்தில் மகுடஞ்சாவடி எஸ்ஐக்கள் பழனிச்சாமி, அப்பு உள்ளிட்ட போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

சரவணன் வந்த இருசக்கர வாகனத்தையும், அந்த வழியே வந்த டிப்பர் லாரியையும் போலீஸார் தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது, டிப்பர் லாரி மோதியதில் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் போலீஸாரைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், சம்பவம் அறிந்து விசாரிக்க வந்த இன்ஸ்பெக்டர் ராஜா ரணவீரன் உள்ளிட்டோரை தாக்கினர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த டிஐஜி நாகராஜன், எஸ்பி ராஜன் ஆகியோர் தலைமையிலான அதி விரைவுப் படையினர் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர். இதனிடையே போலீஸார் மீது இரவு நேரத்தில் சிலர் கற்களை வீசி தாக்கியதில் 10-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர்.

தொடர்ந்து பதற்றம் நிலவியதால் சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட எஸ்பி-க்கள் தலைமையில் 700-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். அவர்கள் இளம்பிள்ளை, இடங்கணசாலை, கோனேரிப்பட்டி கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேற்கு மண்டல ஐஜி பாரியும் சம்பவ இடத்துக்கு வந்து கண்காணிப்புப் பணி குறித்து போலீஸாருடன் ஆலோசனை நடத்தினார்.

சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று சரவணனின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் அவரது ஊருக்கு கொண்டுசெல்லப்பட்டு, தகனம் செய்யப்பட்டது.

இதுகுறித்து எஸ்பி ராஜன் கூறும்போது, “போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்ததை சற்று தொலைவிலேயே பார்த்த சரவணன் திடீரென இருசக்கர வாகனத்தை திருப்பியபோது பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியதில் உயிரிழந்தார்” என்றார்.

இதனிடையே, தாக்குதலில் காயமடைந்த இன்ஸ்பெக்டர் ராஜாரண வீரன் உள்ளிட்ட 16 போலீஸாரும் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை தாக்கிய வர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

1 day ago

தமிழகம்

1 day ago

தமிழகம்

1 day ago

தமிழகம்

1 day ago

தமிழகம்

1 day ago

தமிழகம்

1 day ago

மேலும்