ராமேஸ்வரம் அருகே ரூ.1.35 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்: இந்திய கடலோர காவல்படை

By செய்திப்பிரிவு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே ரூ.135 கோடி மதிப்புள்ள 300 கிலோ கடல் அட்டைகளை இந்திய கடலோர காவல் படை பறிமுதல் செய்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி: கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக, மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, பாம்பனின் மேற்கு பகுதியில் உள்ள அத்தங்கரை கடற்கரை பகுதிக்கு சென்ற இந்திய கடலோர காவல் படையினர் அங்கு சோதனையில் ஈடுபட்டனர்.

இந்திய கடலோர காவல் படையினர் அங்கு வருவதைத் தெரிந்துகொண்ட கடத்தல்காரர்கள், கடத்த இருந்த கடல் அட்டைகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனைத் தொடர்ந்து ரூ.1.35 கோடி மதிப்பிலான 300 கிலோ கடல் அட்டைகளை இந்திய கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள்

கடல் அட்டைகள், கடல்வாழ் உயிர் சூழலை சமன்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுபவை. அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களின் பட்டியலில் கடல் அட்டைகள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்