திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் இன்று (ஜன.1) மோகினி அலங்காரம் நடைபெறவுள்ளது. நாளை (ஜன.2) சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் பகல் பத்து உற்சவம் டிச.23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நாட்களில் தினந்தோறும் உற்சவரான நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.
பகல் பத்து 9-ம் திருநாளான நேற்று நம்பெருமாள் முத்துப் பாண்டியன் கொண்டை, முத்து கர்ணபத்ரம், முத்து அபயஹஸ்தம், முத்துச்சரம், முத்து திருவடி, முத்தங்கி ஆகியவற்றை அணிந்து முத்துக்குறி அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டார். அர்ச்சுன மண்டபத்துக்கு வந்தடைந்த பின்னர், அரையர் சேவை, திருப்பாவாடை கோஷ்டி, வெள்ளிச்சம்பா அமுது, உபயக்காரர் மரியாதை ஆகியவை நடைபெற்றன. பின்னர் இரவு 7 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
பகல்பத்து உற்சவத்தின் 10-ம்திருநாளான இன்று மோகினி அலங்காரம் (நாச்சியார் திருக்கோலம்) நடைபெறவுள்ளது. இதையொட்டி இன்று காலை 6 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, 7 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தை வந்தடைவார். அங்கு பக்தர்களுக்கு சேவை சாதித்த பின், மாலை 5 மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு 5.30 மணிக்கு ஆரியபடாள் வாசல் செல்வார். இரவு 7 மணிக்கு திருக்கொட்டார பிரகாரம் வழியாக வலம் வந்து கருட மண்டபத்தை சென்றடைவார்.
» வடகிழக்கு பருவமழை நிறைவு - 17 மாவட்டங்களில் மழை குறைவு
» பச்சை நிற பாக்கெட் பால் விலை உயர்வா? - ஆவின் நிர்வாகம் மறுப்பு
அங்கு ஆழ்வாராதிகள் மரியாதையாகி இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு 9 மணிக்கு மூலஸ்தானத்துக்கு வருவார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு நாளை (ஜன.2) அதிகாலை 4.45 மணிக்கு நடைபெறவுள்ளது. இதையொட்டி ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் வழிபட ஏதுவாக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago