சேலம் - கோவை பயணிகள் ரயில் ஜனவரி 31-ம் தேதி வரை ரத்து

By செய்திப்பிரிவு

சேலம்: ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக, சேலம்- கோவை இடையே இரு மார்க்கங்களிலும் தினமும் இயக்கப்படும் பயணிகள் ரயில் சேவை இன்று தொடங்கி வரும் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை - சேலம் பயணிகள் ரயில் (எண்-06802) கோவையில் இருந்து காலை 9.05 மணிக்கும், சேலம் - கோவை பயணிகள் ரயில் (எண்-06803) சேலத்தில் இருந்து மதியம் 1.40 மணிக்கும் என தினமும் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், திருப்பூர்- கோவை வழித்தடத்தில் வாஞ்சிபாளையம்-சோமனூர் இடையிலான ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், சேலம்- கோவை மற்றும் கோவை- சேலம் என இரு மார்க்கங்களிலும் இயக்கப்படும் பயணிகள் ரயில் இன்று (1-ம் தேதி) தொடங்கி, வரும் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது, என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்