ஜன.14 முதல் 17 வரை சென்னை சங்கமம்: முதல்வர் தொடங்கி வைக்கிறார்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை சங்கமம் நிகழ்ச்சி ஜன 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறை மற்றும் சுற்றுலாத் துறை இணைந்து நடத்தும் "சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா-2023" தொடர்பாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் இன்று (டிச.31) சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில்,"ஜனவரி மாதம் முழுவதும் தமிழ்நாடு விழாக்கோலம் பெறும் வாய்ப்புள்ளது. தமிழர்களின் கலைகளை பறைசாற்றும் நிகழ்ச்சிகள் தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. ஜல்லிக்கட்டு, சர்வதேச புத்தகக் கண்காட்சி, சென்னை சங்கமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. ஜனவரி 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை சென்னை சங்கமம் - நம்ம ஊர் திருவிழா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் சென்னை சங்கமம் திருவிழா நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மண்டலம் வாரியாக இந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. முதல்வர் 13ம் தேதி தீவுத் திடலில் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். 14 ம் தேதி முதல் சென்னையில் உள்ள பூங்கா மற்றும் விளையாட்டு திடல்கள் என்று 16 இடங்களில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. உணவுத் திருவிழாவும் நடைபெறும். இந்த நிகழ்ச்சியை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஒருங்கிணைப்பு செய்கிறார்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்