சென்னை: உலக நாடுகளின் விஸ்வ குரு நிலையை அடைய மக்கள் அனைவரும் அர்ப்பணிப்புடனும், பக்தியுடனும் கைகோப்போம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், "எனது அன்புக்குரிய தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நமது தேசத்தின் அமுதகால பயணத்தில் உலக நாடுகளின் விஸ்வ குரு நிலையை அடைய மக்கள் அனைவரும் அர்ப்பணிப்புடனும், பக்தியுடனும் கைகோப்போம். உலகில் நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள ஜி-20 தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள நமது தேசம் 2023-ம் புத்தாண்டில் நம்பிக்கையுடனும், அபரிமிதமான தைரியத்துடனும் நுழைகிறது.
நமது குடும்பம், சமுதாயம் மற்றும் நாட்டிற்கு நம்மால் முடிந்த பங்களிப்பை வழங்க உறுதியுடன் நம்மை மீண்டும் அர்ப்பணிப்போம். சில நாடுகளில் அதிகரித்து வரும் கோவிட்-19 பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டு நாம் விழிப்புடன் இருந்து கோவிட் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். புத்தாண்டு-2023 நம் அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், நல்லிணக்கம் மற்றும் வெற்றியைக் கொண்டுவரட்டும்." இவ்வாறு அந்த செய்தியில் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago