சென்னை: மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலஅவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், காலஅவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என மின்நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் மின்நுகர்வோர் அனைவரும் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் பணி நவ.15-ம் தேதி தொடங்கியது.
இணையதளம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் 2,811 சிறப்புமுகாம்கள் செயல்பட்டு பணிகள்நடந்து வருகின்றன. இதுவரை1.61 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளனர்.
இந்நிலையில், மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (டிச.31) நிறைவடைகிறது. இன்னும் சுமார் 1.06 கோடிக்கும் மேற்பட்ட மின்நுகர்வோர் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர். எனவே இதற்கான காலஅவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என மின்நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
» மதுரை அருகே ஒற்றுமையை உணர்த்திய விழா - மாற்று மதத்தினருடன் பள்ளிவாசல் திறப்பு
» ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சுற்றுச்சுவர் சரிந்ததால் புதைந்த கிணறு மற்றும் மோட்டார் அறை
இதற்கிடையே, கடந்த வாரம்செய்தியாளர்களைச் சந்தித்த மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, ‘‘மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க டிச.31-ம்தேதியுடன் காலஅவகாசம் நிறைவடைகிறது. அதன்பிறகு முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, காலஅவகாசம் நீட்டிப்பு குறித்து முடிவு செய்யப்படும்’’ என்று தெரிவித்துள்ளது குறிப் பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago