பிரதமரின் தாயார் மறைவுக்கு ஆளுநர், முதல்வர் இரங்கல்

By செய்திப்பிரிவு

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு ஆளுநர், முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவு மிகவும் வருந்தத்தக்க நிகழ்வு. அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: எங்கள் பிரதமரின் அன்பு வெள்ளம் மறைந்ததைக் கேட்டு எங்கள் கண்களில் கண்ணீர் வெள்ளம். எதையும் தாங்கும் உறுதியை இப்போதும் நம் பிரதமருக்கு இறைவன் அருளட்டும்.

முதல்வர் ஸ்டாலின்: தங்கள் தாயாரின் இழப்பினால் நான் அடைந்துள்ள துயரை விவரிக்க சொற்கள் இன்றித் தவிக்கிறேன். தாயாருடன் தாங்கள் கொண்டிருந்த அழகிய நினைவுகளில் அமைதியும் இளைப்பாறுதலும் பெறுவீர்களாக.

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: பிரதமர் மோடியின் தாயார் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன். அதிமுக சார்பில் பிரதமருக்கு ஆழ்ந்த இரங்கல்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: இத்தகைய சூழலில் ஆறுதல் கூற வார்த்தை இல்லை. உங்களது துக்கத்தை எனது ஆழ்ந்த இரங்கல் மூலம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், விசிக தலைவர் திருமாவளவன், பாரிவேந்தர், எம்.பி., தேமுதிக தலைவர் விஜயகாந்த், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், சமக தலைவர் சரத்குமார், வி.கே.சசிகலா உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்தனர்.

கமலாலயத்தில் அஞ்சலி: சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஹீராபென் படத்துக்கு பாஜக மாநிலதுணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, சக்கரவர்த்தி, நாராயணன் திருப்பதி, அதிமுக சார்பில் ஜெயக்குமார், வளர்மதி மற்றும் பல்வேறு கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்