சென்னை: பொதுமக்களுக்கு பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை வழக்கம்போல வழங்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுமக்களுக்கு பொங்கலுக்கு வேட்டி, சேலைகள் வழங்குவதற்கான பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான ஆய்வுக் கூட்டம் குறித்த செய்திகள் அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வெளிவந்தது. இதைக்கூட பார்க்காமல் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, பொங்கலுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம் என்று ஒரு வெற்று அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
1 கோடியே 79 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் முழுமையாக பொங்கல் திருநாளுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படும். 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த கொள்கை அளவிலான ஆணைகள் வழங்கியும், ஏற்கெனவே அதற்காக ரூ.487.92 கோடி ஒதுக்கீடு செய்தும் முதல்வர் ஆணையிட்டுள்ளார். இத்திட்டத்துக்கு தேவையான வேட்டி, சேலைகள் நிர்ணயிக்கப்பட்ட அளவீடுகளுடன் தரமான நூல்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
5 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago