சென்னை: சென்னை மாநகராட்சியை திறந்தவெளி மலம் மற்றும் சிறுநீர் கழித்தல் அற்ற நகரமாகவும், குப்பை இல்லாத நகரமாக்க பொதுமக்கள் தங்கள் ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம்.
இது தொடர்பாக சென்னைமாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், சென்னைமாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளையும் திறந்தவெளி மலம் மற்றும் சிறுநீர் கழித்தல் அற்ற மாநகரமாகவும், குப்பை இல்லாத மாநகரமாகவும் சான்று பெற மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே, இந்த அறிவிப்பு வெளியிட்ட 15 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் ஆலோசனை மற்றும் ஆட்சேபனை இருந்தால், மாநகராட்சியின் solidwastecorp7@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், மேற்பார்வை பொறியாளர், திடக்கழிவு மேலாண்மைத் துறை, சென்னை மாநகராட்சி, சென்னை-600 003என்ற முகவரியில் கடிதம் மூலமும் தெரிவிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
23 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago