சென்னை: "ஆர்விஎம் வாக்குப்பதிவு முறை தேவையற்றது. அந்தமுறையை அறிமுகப்படுத்துவது, தேர்தல் ஜனநாயகத்தையும், நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் கேலி கூத்தாகிவிடும்" என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னையில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "ஆர்விஎம் வாக்குப்பதிவு முறை தேவையற்றது. அந்தமுறையை அறிமுகப்படுத்துவது, தேர்தல் ஜனநாயகத்தையும், நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் கேலி கூத்தாகிவிடும்.
இதுதொடர்பாக, வருகிற ஜனவரி 16-ம் தேதி தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவதற்கு அறிவிப்பு செய்திருக்கிறது. விசிக சார்பில், மிக கடுமையாக இந்த முறையை எதிர்க்கிறோம். இந்த கருத்தையே அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் பதிவு செய்வோம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டுமின்றி, அனைத்து அரசியல் கட்சிகளும், அனைத்து ஜனநாயக அமைப்புகளும் இந்த முறையை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்" என்றார்.
» இளையராஜாவுடன் இசையிரவு 23 | ‘இளமை இதோ இதோ...’ - ஊர் போற்றவே பேர் வாங்கும் பாடல்!
» அஜித்தின் ‘துணிவு’ ட்ரெய்லர் சனிக்கிழமை இரவு 7 மணிக்கு ரிலீஸ்
முன்னதாக, உள்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வசதிக்காக புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்ய உள்ளது. இது தொடர்பாக ஜன. 16-ம் தேதி நடைபெறும் செயல் விளக்க நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு தேசிய, மாநிலக் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago